ஜூன் மாத இறுதியில், லொசானில் நடந்த ஒரு போக்குவரத்து விபத்தில் 14 வயது கமிலா இறந்தார்.
ஹெல்மெட் இல்லாமல் ஒரு பெண் ஸ்கூட்டரில் செல்வதை கவனித்த பொலிஸ் அதிகாரி, அவளைப் பின்தொடர்ந்தார்.
இந்த துரத்தல் சிறுமியின் மரணத்திற்கு வழிவகுத்தது.
விபத்தின் சூழ்நிலை காரணமாக அலட்சியமாக நடந்த பொலிஸ் அதிகாரி மீது கொலை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள சிறுமியின் பெற்றோர், இப்போது குற்றவியல் புகாரைப் பதிவு செய்துள்ளனர்.
அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மூலம்- 20min