நேற்று மாலை கோட்ஹார்ட் சுரங்கப்பாதையில் விபத்து ஏற்பட்டதால், இரு திசைகளிலும் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த, விபத்து இரவு 8:50 மணியளவில் நிகழ்ந்ததாக யூரி கன்டோனல் காவல்துறை உறுதிப்படுத்தியது.
தெற்கிலிருந்து சுரங்கப்பாதையில் நுழைந்த ஒரு ஓட்டுநர் திடீரென எதிர்பாராத விதமாக சுரங்கப்பாதை சுவரில் மோதினார்.
விபத்தின் விளைவாக ஒருவருக்கு மிதமான காயம் ஏற்பட்டது. விபத்துக்குப் பிறகு பொலிசார் சுரங்கப்பாதையில் போக்குவரத்தை நிறுத்தி அந்த வாகனத்தை அகற்றினர்.
சுரங்கப்பாதை சுமார் இரவு 10:30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
மூலம்- 20min