சாம்பெரியில் நடந்த மவுண்டன் பைக் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது, வெனிசுலாவைச் சேர்ந்த அன்ரனி ரூயிஸ், போட்டியின் இறுதியில், கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர் பகுதியில் மோதினார்.
மணிக்கு சுமார் 50 கிமீ வேகத்தில், அவர் மோதியதில், பலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த இரண்டு பார்வையாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
காயமடைந்த எட்டு வயது சிறுமி மற்றும் 52 வயது பெண் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வலாய்ஸ் கன்டோனல் காவல்துறையின் கூற்றுப்படி, அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.

