ருஷ்செக்-ஹியூபாச்சில் (ருஷ்செக் நகராட்சி) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, மதியம் 12:50 மணிக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஸ்வார்சன்பர்க்கிலிருந்து ருஷ்செக் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதினார்.
இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், பயணி ஒருவரும் விபத்தில் படுகாயமடைந்தனர்.
எனினும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், கடுமையான காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மற்ற இருவரும் ரேகா ஹெலிகொப்டர் மற்றும் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூலம்- 20min.

