உக்ரைன் தலைநகர் கீவ்வை தாக்கிய ரஷ்ய ஏவுகணையில் சுவிஸ் உதிரிப்பாகங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, ரஷ்ய ஏவுகணை உக்ரைன் அமைச்சரவை கட்டிடத்தைத் தாக்கியது.
பிரதமர் அலுவலகம் மற்றும் பல அமைச்சுக்களின் அலுவலகங்கள் உள்ள அந்த கட்டடம் மீது, போர் தொடங்கியதிலிருந்து நடத்தப்பட்ட முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும்.
ஏவுகணையின் சிதைவுகளை ஆய்வு செய்ததில், அது மேற்கத்திய பாகங்களால் நிரம்பியிருப்பது தெரியவந்தது.
சுவிஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களும், கண்டுபிடிக்கப்பட்டது.
உக்ரைன் ஏவுகணையின் படங்களையும் அதில் காணப்படும் பாகங்களின் பட்டியலையும், வெளியிட்டுள்ளது.
பட்டியலில் அமெரிக்க, ஜப்பானிய, பிரிட்டிஷ் மற்றும் சுவிஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கூறுகள் அடங்கும்.
இந்த பாகங்களில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை என்று தொடர் எண்கள் காட்டுகின்றன, ஆனால் மற்றவை சமீபத்தில் தயாரிக்கப்பட்டவை,
ரஷ்யா 2022 இல் உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கிய பிறகும் கூட அவை தயாரிக்கப்பட்டுள்ளன.
மூலம்- 20min.