காசா ‘இனப்படுகொலை’க்கு எதிராக சுவிஸ் தலைநகர் பெர்னில் எம்எஸ்எவ் எனப்படும், (Médecins Sans Frontières Suisse ) அரச சார்பற்ற நிறுவனம், ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
அந்த நிறுவனம்,, Bundesplatz இல் 15 மீட்டர் நீளமுள்ள ஒரு கடிதத்தை வெளியிட்டது. அதில் 30,000 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இனப்படுகொலைக்கு எதிராக, சுவிட்சர்லாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் சிவப்பு எழுத்துக்களில் அச்சிடப்பட்ட இந்தக் கடிதம், சுவிஸ் வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
“மருத்துவர்களால் இனப்படுகொலையை நிறுத்த முடியாது” என்ற தலைப்பில், Médecins Sans Frontières (MSF), கிடைக்கக்கூடிய அனைத்து அரசியல், இராஜதந்திர மற்றும் பொருளாதார வழிகளையும் பயன்படுத்தி இஸ்ரேல் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க பெடரல் கவுன்சிலை அழைப்பு விடுத்துள்ளது.
ஜெனீவா உடன்படிக்கைகளின் அடித்தளமான சுவிட்சர்லாந்து செயல்படுவதற்கான பொறுப்பையும் வாய்ப்பையும் கொண்டுள்ளது என்று MSF சுவிட்சர்லாந்து தலைவர் மைக்கேலா செராஃபினி கூறினார்.
நடுநிலைமை என்பது அமைதியாக இருப்பது அல்ல, மாறாக மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காக நிற்பதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸ் நாடாளுமன்றத்தின் இலையுதிர் காலக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கும் நேரத்தில் MSF இன் நடவடிக்கை வந்துள்ளது.
மூலம்- swissinfo