ரஷ்ய ட்ரோன்கள் நேற்று போலந்திலும் ருமேனியாவிலும் ஊடுருவும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ரஷ்ய ட்ரோன்கள், நேட்டோ எல்லைக்குள் ஊடுருவியது அல்லது அதற்கு அருகில் காணப்பட்ட நிலையில், இரண்டு நாடுகளும் தமது போர் விமானங்களைத் தயார்படுத்தியிருந்தன.
உக்ரைனின் அண்டைப் பகுதிகளில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக நேற்றுப் பிற்பகல் போர் விமானங்கள் புறப்பட்டச் சென்றதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தரைவழி வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிக எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டன.
உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள டானூப் டெல்டாவில் உள்ள துல்சியாவின் கிழக்கு ருமேனியப் பகுதியில், ருமேனிய இராணுவமும் சனிக்கிழமை ஒரு ட்ரோனைக் கண்டது.
ஃபெடெஸ்டி விமானத் தளத்திலிருந்து இரண்டு F-16 போர் விமானங்கள் கண்காணிப்புப் பணியில் புறப்பட்டன.
நேட்டோ அங்குள்ள வான்வெளியைப் பாதுகாக்க ருமேனியாவில், உள்ள இரண்டு ஜெர்மன் யூரோஃபைட்டர்களையும் எச்சரித்தது.
“போலந்து எல்லைக்கு அருகே உக்ரைனில் இயங்கும் ரஷ்ய ட்ரோன்களால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக, போலந்து மற்றும் நட்பு நாடுகள் இரண்டும் ஒரு தடுப்பு வான்வழி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.” என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் சனிக்கிழமை X இல் பதிவிட்டுள்ளார்.
போலந்தின் தென்கிழக்கில் உள்ள லுப்ளினில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக சிவில் விமானப் போக்குவரத்திற்கு மூடப்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, போலந்து இராணுவம் வான்வழி நடவடிக்கை மற்றும் அதிகரித்த எச்சரிக்கை நிலை முடிவுக்கு வந்ததாக அறிவித்தது.
மூலம்- 20min

