பியூட்ரானில் இருந்து ரிட்ஸ் நோக்கி செல்லும் ரூட் டி’அப்ரோஸில் ஒரு மோட்டார் சைக்கிள் வலது பக்க வளைவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த விபத்தில் 17 வயதுடைய போர்த்துகீசிய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
அவசர சேவைகளின் விரைவான உதவிகள் கிடைத்த போதிலும், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min

