வத்திக்கானில், சுவிஸ் காவல்படையின் பதவியேற்பு விழாவில் பாப்பரசர் லியோ XIV பங்கேற்றுள்ளார்.
50 ஆண்டுகளில் இந்த நிகழ்வில் பாப்பரசர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இது சுவிஸ் காவல்படைக்கு ஒரு சிறப்பு மரியாதையாகும்.
சனிக்கிழமை நடைபெற்ற புதிய காவலர்களின் பதவியேற்பு விழாவில் பாப்பரசர் லியோ XIV கலந்து கொண்டிருந்தார்.
பொதுவாக, இந்த விழாவில் பாப்பரசரின் சார்பில் பேராயர் எட்கர் பெனா பர்ரா கலந்து கொள்ளுவார்.
அவர் நிர்வாகத்தின் தலைவராகவும், வத்திக்கானில் மூன்றாவது மிக உயர்ந்த அதிகாரியாகவும் கருதப்படுகிறார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவான பாப்பரசர், கடைசியாக சுவிஸ் காவல்படையின் பதவியேற்பில் கலந்து கொண்டது 1968 ஆம் ஆண்டிலாகும்.
மூலம்- 20min.

