2024 ஆம் ஆண்டில், சூரிச் விமான நிலையத்தில் மட்டும் 180,000 பொருட்கள் ஆபத்தான பொருட்களாகக் கருதப்பட்டதால் பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றில், 40,000 பொருட்கள் கைப் பைகளிலிருந்தும் 140,000 பொருட்கள் சோதனை செய்யப்பட்ட பொதிகளிலிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
டிராவல் நியூஸ்அறிக்கையின்படி, விமான நிலையப் பாதுகாப்பு பெரும்பாலும் கைப் பைகளில் இருந்து பின்வரும் பொருட்களை பறிமுதல் செய்கிறது:
லைட்டர்கள், தீப்பெட்டிகள், பட்டாசுகள், எரிபொருள் பேஸ்ட்கள், எரிபொருள் தோட்டாக்கள் என்பனவாகும்.
பின்வரும் பொருட்கள் பொதுவாக சோதனை செய்யப்படும் பொதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்படுகின்றன:
தளர்வான பேட்டரிகள், பட்டரிகள், பவர் பாங்க், லைட்டர்கள், மின்-சிகரெட்டுகள், மொபிலிட்டி எய்ட்ஸ் என்பனவாகும்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பவர் பாங்க், இ-ஸ்கூட்டர்கள் மற்றும் எலக்ட்ரோனிக் ஸ்ட்ரோலர்கள் போன்ற பட்டரி மூலம் இயங்கும் சாதனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் அதிகரிப்புக்கு மற்றொரு காரணம், விமான நிலையத்தில் நடைமுறையில் உள்ள விதிகள் குறித்து குறைவான விழிப்புணர்வு கொண்ட சாதாரண பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகும்.
பயணிகள் ஒப்படைக்கும் பொருட்கள் பொலிசாரால் சேகரிக்கப்படுகின்றன.
மலிவான பொருட்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. அதிக மதிப்புமிக்க பொருட்கள் பொலிசாரால் 30 நாட்களுக்கு வைக்கப்படுகின்றன; இந்த காலகட்டத்தில், அவற்றை கட்டணத்திற்கு சேகரிக்கலாம்.
மூலம்-20min.

