சியோனில் உள்ள ஒரு துப்பாக்கிக் கடையில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:30 மணிக்குப் பின்னர் வலாய்ஸ் கன்டோனல் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்பர் வலாய்ஸில் திருடப்பட்ட ஒரு வாகனத்தில் திருடப்பட்ட பொருட்களுடன் குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
அப்ரோஸிலிருந்து சியோனுக்குச் செல்லும் வீதியில் குற்றவாளிகள் தங்கள் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தனர்.
அவர்கள் திருடிய பொருட்களை காரில் விட்டுவிட்டு, நடந்து ஓடிவிட்டனர்,
வலய்ஸ் கன்டோனல் பொலிஸ் உடனடியாக வில்லெஸ் டு சென்டர் பிராந்திய பொலிஸ் மற்றும் ரிட்ஸ் நகராட்சி பொலிஸ ஒத்துழைப்புடன் ஒரு பெரியளவிலான தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.
இதன்போது, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 19 வயது பெல்ஜிய நாட்டவரும் 18 வயது கொங்கோ நாட்டைச் சேர்ந்தவரும் ஆவர்.
மூலம்-20min.

