சாமோசனில் உள்ள வலைஸ் கிராமத்தில் மளிகைக் கடை மற்றும் கஃபேவை நடத்தும் கிராம கூட்டுறவு கடை கொன்கோர்டியா, இந்த வாரம் முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்களை விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
எனர்ஜி பானங்களை தொடர்ந்து உட்கொள்வதால் இருதய மற்றும் நரம்பியல் அபாயங்கள் இருப்பதாக நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், இன்றுவரை அவற்றின் விற்பனையை சட்டப்பூர்வமாக தடை செய்வதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கான அடிப்படையை அந்த ஆராய்ச்சிகள் இன்னும் வழங்கவில்லை.
பொதிகளில் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இளைய குழந்தைகள் இந்த பானங்களை தொடர்ந்து வாங்குவது கவனிக்கப்படுகிறது.
கடையின் ஊழியர்களுடன் கலந்துரையாடிய பிறகு கூட்டுறவு இந்த முடிவை எடுத்தது.
நிச்சயமாக, இது அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்யாது, மேலும் வருவாயில் இழப்பை எதிர்நோக்க நேரிடம் என்று நிர்வாக இயக்குனர் எரிக் ஹாமன் தெரிவித்துள்ளார்.
மூலம்- 20min.

