பெர்னீஸ் ஓபர்லேண்டில் உள்ள மெய்ரிங்கன் விமானப்படை தளத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் கசிந்து, அருகிலுள்ள பிரையன்சு ஏரியை அடைந்துள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை எடுக்க விரைவாக செயல்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மெய்ரிங்கன், போடேலியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பெர்னின் பாதுகாப்பு மற்றும் மீட்பு சேவை ஆகியவை விமானப்படை தளத்திலிருந்து பிரையன்சு ஏரியின் முகத்துவாரம் வரை மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
பெர்னீஸ் கன்டோனல் பொலிசார் கசிவுக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இராணுவம் கூறுகிறது.
மூலம்- swissinfo

