சென் காலன் ரயில் நிலையத்தில் உள்ள மெக்டொனால்ட்ஸ் முன் வெள்ளிக்கிழமை மாலை, இரண்டு இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது, 15 வயது சிரிய இளைஞன் கத்தியால் குத்தப்பட்டார். சந்தேகத்திற்குரிய குற்றவாளி, 13 வயதுடைய கொசோவர் கைது செய்யப்பட்டதாக சென் காலன் பொலிசார் அறிவித்தனர்.
நேற்று இரவு 9:30 மணிக்கு சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மூலம்- 20min.

