கெர்லாஃபிங்கனில் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள வில்லெர்ஸ்ட்ராஸ்ஸில் இரண்டு பாதசாரிகள் மீது ஒரு கார் மோதியது.
நேற்று இரவு 7:30 மணியளவில், இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று சோலோதர்ன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பெண்களும் வில்லெர்ஸ்ட்ராஸ்/பான்ஹோஃப்ஸ்ட்ராஸ் சந்திப்பில் உள்ள பாதசாரி கடவையைக் கடக்கும்போதே கார் மோதியுள்ளது.
மூலம்- 20min

