பாஸல்-லேண்ட்ஷாஃப்ட் மாகாணத்தின் பின்னிங்கனில் உள்ள போல்வெர்க்ஸ்ட்ராஸ்ஸில் நேற்று மதியம் 12:15 மணியளவில், இடம்பெற்ற கார் விபத்தில், 77 வயதான ஓட்டுநர் உயிரிழந்தார்.
அந்த நபர் டைஃபெங்ராபென்ஸ்ட்ராஸிலிருந்து போல்வெர்க்ஸ்ட்ராஸ்ஸுக்கு ரோட்மேன்போடென்ஸ்ட்ராஸ்ஸின் திசையில் வந்து கொண்டிருந்தார்.
மருத்துவ அவசரநிலை காரணமாக, வாகனத்தின் கட்டுப்பாட்டை அவர் இழந்துள்ளார்.
இதனால் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் அருகிலுள்ள தூண் மீது கார் நேருக்கு நேர் மோதியது.
முதலுதவி அளிப்பவர்கள் மற்றும் துணை மருத்துவர்களின் உடனடி மீட்பு முயற்சிகள் இருந்தபோதிலும், ஓட்டுநரின் மரணத்தைத் தடுக்க முடியவில்லை.
மூலம்- 20min.

