இஸ்ரேலுக்கு எதிராக, பெர்னில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
பழைய நகரத்தின் வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். முகமூடி அணிந்த ஒரு குழு பேரணியை வழிநடத்தியது.
பொலிசாரை இலக்கு வைத்து கொண்டு பட்டாசுகளை பயன்படுத்தி அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
பிற கன்டோர்களில் இருந்து அழைக்கப்பட்ட பொலிசார் பெருமளவில் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
நாடாளுமன்ற கட்டிடத்தின் முன் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் எதிர்கொண்டு தடுத்தனர்.
இதன்போது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் தடைகளை உடைத்து முன்னேற முயன்றனர்.
பெருமளவில் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
பேரணியில் பங்கேற்பாளர்கள் பெர்னின் பிரதான ரயில் நிலையத்தை ஆக்கிரமிப்பதை பொலிசார் தடுத்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் பாதைகளை அடைப்போம் என்று அவர்கள் அறிவித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களால் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டன.
இதனால் நேற்றிரவு 8.30 மணிவரை ரயில் நிலையம் மூடப்பட்ட நிலையில் இருந்தது.
மாலை 6 மணிக்குப் பிறகு, ஆர்ப்பாட்டக்காரர்கள் பஹ்ன்ஹோஃப்பிளாட்ஸில் உள்ள கண்ணாடி விதானத்தின் கீழ் பின்வாங்கினர்.
பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. ஆனால் மாலை 6:30 மணியளவில் கூட, பொலிசார் பல நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டே இருந்தனர்.
தீ வைப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவத்தில், பொலிசார் பலர் காயம் அடைந்துள்ளனர்.
100 வரையான போராட்டக்காரர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மூலம்- bluewin, 20min.

