ஆர்காவ் மாகாண பொலிஸ் ரோந்துப் பிரிவினர் நேற்று அதிகாலை 1 மணியளவில், வுரென்லோஸ் ஓய்வு பகுதியில் போக்குவரத்து சோதனையை நடத்தினர்.
இதன் போது, ஒரு வெள்ளை கார், சோதனைச் சாவடியை நெருங்கி, பிரேக் போட்டது, ஆனால் பின்னர் திடீரென வேகமெடுத்து, மூடப்பட்ட பகுதி வழியாக பெர்ன் நோக்கி A1 இல் தப்பிச் சென்றது.
பொலிசார் உடனடியாக அதனை பின்தொடர்ந்து சென்றனர்.
ஓட்டுநர் வெட்டிங்கன்-ஓஸ்ட் வெளியேறும் இடத்தில் மோட்டார் பாதையை விட்டு வெளியேறி நகர மையத்தை நோக்கி வேகமாகச் சென்றார்.
இரண்டாவது ரோந்துப் பிரிவினர் ஜென்ட்ரம்ஸ்ப்ளாட்ஸில் உள்ள ரவுண்டானாவில் நிறுத்திய போதும், ஓட்டுநர் அதிவேகத்தில் பாதையில் நுழைந்து காரின் கட்டுப்பாட்டை இழந்தார்.
கார் ஒரு கடையின் ஜன்னலை மோதி, உள்ளே நுழைந்து நின்றது.
ஒஸ்ரியாவைச் சேர்ந்த 22 வயது ஓட்டுநரும், அவரது 26 வயது பெண் பயணியும், பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். செர்பியாவைச் சேர்ந்த 65 வயது பெண் பயணிக்கு மிதமான காயங்கள் ஏற்பட்டன.
மூவரும் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கடையும் காரும் முற்றிலும் சேதம் அடைந்தன. விபத்தினால் தண்ணீர் குழாய் வெடித்தது, தீயணைப்புத் துறையின் நடவடிக்கையும் தேவைப்பட்டது. பேருந்து போக்குவரத்தையும் தற்காலிகமாக திருப்பி விட வேண்டியிருந்தது.
அவர் ஏன் தப்பி ஓடினார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை
மூலம்- bluewin

