முன்சிங்கன் சேவை பகுதிக்கு அருகிலுள்ள A6 மோட்டார் பாதையில் பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, மாலை 5:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பெர்ன் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
- Advertisement -

மோட்டார்வே சேவை நிலையத்தில் இருந்த பொலிஸ் ரோந்துப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
இறந்தவரின் அடையாளம் குறித்து தடயங்கள் உள்ளன, ஆனால் இன்னும் அவர் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
மூலம்- bluewin


