ரஷ்யாவின் பெல்கோரோட்டில் உக்ரேனின் ட்ரோன் தாக்குதலில் ஒரு அணை சேதமடைந்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் இருவரும் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
உக்ரைன்- ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள அணை குறிப்பிடத்தக்க சேதம் அடைந்துள்ளதுடன், அணையில் உள்ள விரிசல் வழியாக நீர் கொட்டுவதையும் காட்டும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் ஒரு நாளுக்குள் ஒரு மீட்டர் குறைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கட்டுப்பாடற்ற வெளியேற்றம் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரேனிய நகரமான வோவ்சான்ஸ்க் அருகே சிவர்ஸ்கி டோனெட்ஸ் நதியைக் கடந்த, ரஷ்ய படைப்பிரிவுகள் மற்ற ஆயுதப் படைகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் ரஷ்ய போர்த் தளவாடங்களை சீர்குலைத்துள்ளது. பல ரஷ்ய படைப்பிரிவுகள் நம்பகமான விநியோக வழித்தடங்கள் அல்லது வலுவூட்டல்கள் இல்லாமல் ஆற்றின் உக்ரேனியப் பக்கத்தில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது.
சில ரஷ்ய முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூலம்- bluewin

