சோலோத்தர்ன் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், மற்றும் சிலரும் போதைப்பொருள் சட்டத்தை மீறியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அரசு சட்டமா அதிபர் அலுவலகம் தற்போது கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.
பலர் காவலில் உள்ளனர், ஆனால் விசாரணை காரணங்களுக்காக, இந்த நேரத்தில் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்று சோலோத்தர்ன் மாகாண சட்டமா அதிபர் அலுவலகத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் கோனி பிராண்ட் தெரிவித்துள்ளார்.
அவர்கள் போதைப்பொருள் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பிராண்ட் கூறினார். கடந்த வியாழக்கிழமை பொலிஸ் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டால், குறிப்பிட்ட மாகாண நாடாளுமன்ற உறுப்பினரை ராஜினாமா செய்ய கட்சி கோரும் என்று SVP நாடாளுமன்றக் குழுவின் தலைவர் பீட் குன்ஸ்லி, கூறினார்.
25 உறுப்பினர்களைக் கொண்ட SVP, கடந்த ஏப்ரல் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக மாகாண நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய நாடாளுமன்றக் குழுவைக் கொண்டுள்ளது.
மூலம்- bluewin

