அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேற்று மாலை வரிகள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக சுவிஸ் தூதுக்குழுவைச் சந்தித்துள்ளார்.
இதனை “திறந்த மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல்” என்று ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் அவர் விவரித்துள்ளார்.
“சுவிட்சர்லாந்தின் உயர்மட்ட பிரதிநிதிகளைச் சந்தித்தது ஒரு பெரிய மரியாதை.
பல்வேறு தலைப்புகளில், குறிப்பாக வர்த்தகம் மற்றும் தற்போதுள்ள வர்த்தக ஏற்றத்தாழ்வு குறித்து நாங்கள் திறந்த மற்றும் ஆக்கபூர்வமான விவாதம் நடத்தினோம்.
எங்கள் வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர், சுவிஸ் தலைமையுடன் விவாதங்களைத் தொடருவார் என்ற ஒப்பந்தத்துடன் சந்திப்பு முடிந்தது.
அவர்களின் சிறந்த பணி மற்றும் அர்ப்பணிப்புக்காக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றி கூறுகிறேன்.“ என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மூலம்- 20min.

