காசாவில் மனிதாபிமான உதவிக்களுக்காக சுவிஸ் வெளியுறவு அலுவலகம் உடனடியாக 10 மில்லியன் பிராங்கை ஒதுக்கவுள்ளது.
பலஸ்தீன அதிகாரசபையின் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்கும், மதங்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கும் மேலும் 10 மில்லியன் பிராங் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பரில் ஐ.நா. பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியூயோர்க் பிரகடனத்தை நிறைவு செய்யும் மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு குறுகிய கால ஆதரவை வழங்குவதற்காக, சுவிஸ் வெளியுறவுத் துறை (FDFA) இந்தத் நிதியை வழங்குகிறது.
ஒக்டோபர் 10 ஆம் திகதி காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து ஏற்பட்ட முன்னேற்றத்தை, பணயக்கைதிகள் விடுதலை மற்றும் மனிதாபிமான உதவிகளின் மேம்பட்ட ஓட்டம் போன்றவற்றை, வரவேற்பதாக பெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த கட்டத்தில் இந்த நிதி போதுமானதாக இல்லை. கூடுதலாக, சுவிட்சர்லாந்து சர்வதேச மனிதாபிமான சட்டம், ஆயுதக் குறைப்பு மற்றும் கண்ணிவெடி அகற்றல் ஆகிய துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கும் என்றும், பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மூலம்- swissinfo

