சுவிட்சர்லாந்தில் வேலையின்மை வீதம், ஒக்டோபரில் 2.9% ஆக உயர்ந்ததுள்ளது. இது செப்ரெம்பரில் 2.8% ஆக காணப்பட்டது.
ஒக்டோபர் மாத இறுதியில், பிராந்திய வேலைவாய்ப்பு மையங்களில் (RAV) மொத்தம் 135,212 பேர் வேலையில்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று வியாழக்கிழமை பொருளாதார விவகாரங்களுக்கான அரச செயலகம் (Seco) தெரிவித்துள்ளது. இது செப்டம்பரை விட 1,979 பேர் அதிகம்.
Seco இன் கூற்றுப்படி, இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி பருவகால விளைவுகளால் ஏற்பட்டுள்ளது. பருவகாலமாக சரிசெய்யப்பட்டால், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 653 மட்டுமே அதிகரித்துள்ளது.
வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது 5946 பேரினால் அதிகரித்து 219,696 ஆக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, வேலை தேடுபவர் வீதம் 4.5% இலிருந்து 4.7% ஆக உயர்ந்துள்ளது.
மறுபுறம், RAV இல் பதிவுசெய்யப்பட்ட வெற்றிடங்களின் எண்ணிக்கை குறைந்தது, 6.4% குறைந்து 34,995 ஆக உயர்ந்துள்ளது.
மூலம்- swissinfo

