பாசலில் லொறி மோதியதில் 90 வயது பாதசாரி ஒருவர் உயிரிழந்தார். வெட்ஸ்டீன்பிளாட்ஸில் நேற்றுக் காலை 9:30 மணியளவில், இந்த விபத்து நடந்தது.
விபத்து நடந்த இடத்திலேயே அந்தப் பெண் இறந்தார். விபத்துக்கான சரியான காரணம் தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பாதசாரி மீது லொறி மோதியது.
21 வயது லொறி ஓட்டுநருக்கு இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய கன்டோனல் பொலிசார் உத்தரவிட்டனர்; சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட மூச்சுப் பரிசோதனை எதிர்மறையாக இருந்தது.
இந்த விபத்தை அடுத்து, வெட்ஸ்டீன்பிளாட்ஸில் டிராம் மற்றும் பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
மூலம்-swissinfo

