சென் காலன், புச்ஸ் இல் உள்ள ஒரு நிலத்தடி தரிப்பிடத்தில், 18 வயது ஓட்டுநர் ஒருவர் காரை இயங்கிய போது, கொன்கிரீட் தூணில் மோதினார்.
இதனால் காரில் இருந்த நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.
புதன்கிழமை மாலை, இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த விபத்தில் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு பெண் பயணிகள் காயமடைந்த நிலையில், அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூலம்- 20min.

