44 வயதான ஊபர் ஓட்டுநர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றங்களுக்காக குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக சூரிச் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
அந்த நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, நாட்டிலிருந்து ஏழு ஆண்டுகள் நாடுகடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மசிடோனியாவில் பிறந்து இத்தாலிய குடியுரிமை பெற்ற 44 வயதான அவர், தனது காரில் மூன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக சட்டமா அதிபரால் குற்றம் சாட்டப்பட்டார்.
அரசு தரப்பு ஒன்பதரை ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரியிருந்தது. தீர்ப்பு இன்னும் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை – அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
மூலம்- 20min

