எப்னாட்-கப்பலில் உள்ள பைபாஸ் வீதியில் வெள்ளிக்கிழமை காலை ஒரு லொறி தீப்பிடித்து எரிந்துள்ளதாக சென்.காலன் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
இடிபோன்ற சத்தம் கேட்டு ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு உடனடியாக வண்டியில் இருந்து இறங்கினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, வாகனம் தீப்பிடித்து எரிந்தது.
தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முடிந்த போது, சுமார் 90,000 சுவிஸ் பிராங்குகள் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் காலை பயணிகள் போக்குவரத்து நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது, அதே நேரத்தில் 46 பேர் கொண்ட உள்ளூர் தீயணைப்பு படையினர், பொலிசாருடன் சேர்ந்து சம்பவ இடத்தில் இருந்தனர்.
மூலம்- 20min.

