சூரிச்சின் ட்ருட்டிகானில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த மரணங்கள், கொலை மற்றும் தற்கொலை என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
தற்போதைய தகவலின்படி, 78 வயது நபர் ஒருவர் தனது 65 வயது மனைவியைக் கொன்றுவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாக சூரிச் கன்டோனல் பொலிசார் நேற்று தெரிவித்தனர். இறந்த இருவரும் சுவிஸ் குடிமக்கள் ஆவர்.
தனது பெற்றோர் வீட்டில் உயிரற்ற நிலையில் இருப்பதைக் கண்ட மகள், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு பொலிசாருக்கு தகவல் அளித்தார்.
அரசு வழக்கறிஞர் அலுவலகம், கன்டோனல் போலீசாருடன் இணைந்து, சம்பவத்தின் சூழ்நிலைகளை விசாரித்து வருகிறது.
மூலம்- bluewin

