அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சுவிட்சர்லாந்து பொருட்களுக்கான வரி, 15 சதவீதமாக குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதத்தில் விதிக்கப்பட்ட கடுமையான 39 சதவீத கூடுதல் வரிக்குப் பின்னர், இது ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணமாக இருக்கும் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
எனினும், சுவிஸ் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ப்ளூம்பெர்க்கிற்கு இதுபற்றிக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் ஆரம்பத்தில் இதுகுறித்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை என்று அறிக்கை மேலும் கூறுகிறது.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேற்று ஊடங்களுடனான கேள்வி பதில் அமர்வின் போது பெர்னுடன் வரி பேச்சுவார்த்தைகள் பற்றி கருத்து வெளியிட்டார்.
வரிகளைக் குறைக்க வெள்ளை மாளிகை சுவிட்சர்லாந்துடன் இணைந்து செயல்படுகிறது என்று அவர் கூறினார்.
“நான் எந்த எண்களையும் குறிப்பிடவில்லை, ஆனால் சுவிட்சர்லாந்து முன்னேற உதவ நாங்கள் ஏதாவது செய்யப் போகிறோம்.” அமெரிக்க வரிகளால் சுவிட்சர்லாந்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து தொடர்ந்து வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்- 20min.

