நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள சுவிஸ் தூதரக வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆபத்தான வேட்டையாடும் விலங்கான சிறுத்தை எங்கிருந்து வந்தது, எப்படி சுவிஸ் தூதரக வளாகத்திற்குள் நுழைந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், அருகிலுள்ள நக்கு நதி நடைபாதையில் இருந்து அந்த சிறுத்தை வந்து தூதரக வளாகத்தில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்று தேசிய இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பாதுகாப்பு அதிகாரி கோபிந்த பிரசாத் போகரேல் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தூதரக வளாகத்தில் உள்ள ஒரு குறுகிய சந்துக்குள் அந்த விலங்கு மறைந்திருந்தது. சிறுத்தை மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, பின்னர் மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சுவிஸ் தூதுவ டானியல் மியூவ்லி அவசர சேவைகளுக்கு X தளத்தில் நன்றி தெரிவித்தார்: “உங்கள் முயற்சிகளுக்கு நன்றி, இந்த மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்- swissinfo

