ஜெனீவாவில் உள்ள பெய்ன்ஸ் டெஸ் பாக்விஸுக்குச் செல்லும் நடைபாதை பாலம் அருகே நீருக்கடியில் முதலாம் உலகப் போர் கால ஷெல் ஒன்று நேற்றுக்காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செயலிழந்த நிலையில் இருந்த இந்த ஷெல், காவல்துறையின் வெடிபொருள் அகற்றும் பிரிவால் அகற்றப்பட்டது.
டைக் பராமரிப்பில் பணிபுரியும் சுழியோடிகளால் இது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அவர்கள் அதனை ஒரு சிறிய கொள்கலன் என்று நினைத்தார்கள், ஆனால் பின்னர் அது ஒரு ஷெல் என்பதை உணர்ந்தார்கள்.
தொழிலாளர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, பிரபலமான திறந்தவெளி பொது நீச்சல் பகுதியான பெய்ன்ஸ் டெஸ் பாக்விஸ், காலை 11.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்ட பின்னர், அதனை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மூலம்- swissinfo

