அப்பென்செல்லில் வாகனங்களை முந்திச் செல்ல முயன்ற 46 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கடுமையான விபத்தில் சிக்கினார்.
வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சைக்கிள் ஓட்டுநர் ஒரு காரின் கீழ் சிக்கி பல மீட்டர்கள் இழுத்துச் செல்லப்பட்டார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மோட்டார் சைக்கிளை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பின்னர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மூலம்- bluewin

