சூரிச் நகரில் சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டதற்கமைய, பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 4 மணியளவில், முகமூடி அணிந்த பல நூறு பேர் ஹெல்வெட்டியாபிளாட்ஸில் கூடினர். பின்னர் ஆர்ப்பாட்டம் ஸ்டாஃபாச்செர்ஸ்ட்ராஸ் வழியாக லாங்ஸ்ட்ராஸ் நோக்கிச் சென்றது.
அதையடுத்து, லாங்ஸ்ட்ராஸ் நோக்கித் திரும்பி லிம்மாட்பிளாட்ஸ் நோக்கித் தொடர்ந்தது. பின்னர் பேரணி பேடெனர்ஸ்ட்ராஸ் வழியாக திரும்பிய நிலையில், சீபான்ஸ்ட்ராஸ்ஸை நோக்கி அணிவகுப்பு தொடராமல் பொலிசார் தடுத்தனர்.
இதன் விளைவாக, ஆர்ப்பாட்டம் மாவட்டம் 4 வழியாக மற்றொரு குறுகிய சுழற்சிக்குப் பிறகு, ஹெல்வெட்டியாபிளாட்ஸுக்கு அணிவகுத்துச் சென்றது, அங்கு இறுதி பேரணிக்குப் பிறகு ஆர்ப்பாட்டம் கலைந்து சென்றது.
முழு ஊர்வலத்திலும், கையடக்க தீப்பந்தங்கள் எரிந்தன. வேறு எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லை.
இருள் சூழ்ந்ததால் பதட்டமாக இருந்த போதும் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட்டன.
பல்வேறு டிராம் மற்றும் பேருந்து பாதைகளில் இரவு 8:30 மணி வரை இடையூஞறுகள் ஏற்பட்டன.

