சூரிச்சின் ஆண்டெல்ஃபிங்கனில் உள்ள வெய்ன்லேண்ட்ஸ்ட்ராஸ்ஸில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட ஒரு கடுமையான போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.
இரண்டு வாகனங்களிலும் இருந்த மூன்று பெரியவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒரு காரில் மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு குழந்தை பலத்த காயமடைந்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மற்றொரு குழந்தை சிறிய காயங்களுடன், அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் ஒரு குழந்தை சிறிய காயங்களுக்குள்ளானது.
மூலம்- 20min.

