ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு (ICRC), 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், 17% குறைப்பு காரணமாக 2,900 முழுநேர பணியாளர்களை நீக்கவுள்ளது.
வியாழக்கிழமை ஜெனீவாவில் இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இதனால் ஜெனீவா தலைமையகத்தில் சுமார் 200 பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் ICRC தலைவர் மிர்ஜானா ஸ்போல்ஜாரிக் தெரிவித்தார்.
“எங்கள் செயற்பாடுகளை முடிந்தவரை பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது,” என்று ஸ்போல்ஜாரிக் கூறினார்.
சூழ்நிலையின் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, பணிநீக்கங்களின் எண்ணிக்கையை கணிப்பது சாத்தியமற்றது என்று அவர் கூறினார்.
தலைமை அலுவலகம் மற்றும் இரண்டு பிராந்திய அலுவலகங்கள் 400 முழுநேர பணியாளர்களை இழக்கும்.
மூலம்- swissinfo

