சூரிச்சில் ஸ்டேடெல்ஹோஃபென் ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு 10 மணியளவில் டிராம் மோதி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
செக்செலூடென்பிளாட்ஸில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
“நான் டிராமில் அமர்ந்திருந்தேன், முதலில் கவனிக்கவே இல்லை. பின்னர் டிராம் நின்றது. வெளியே, அதிர்ச்சியடைந்த முகங்களுடன் மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். நான் இறங்கியபோது, டிராமின் அடியில் யாரோ கிடப்பதைக் கண்டேன்.
போலீசார், தீயணைப்பு படை மற்றும் மீட்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். என்று பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

