ஒன்பது மாதங்களுக்கு பின்னர், சுவிஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவுள்ளதாக பெடரல் புள்ளியியல் அலுவலகம் (FSO) தெரிவித்துள்ளது. சம்பளங்கள், 2% ஆல் அதிகரிக்கும் என்றும், இந்த அதிகரிப்பு பணவீக்கத்தை விட அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மற்றும் செப்டம்பர் இறுதிக்கு இடையில், சுவிட்சர்லாந்தில் பெயரளவு ஊதியங்கள் 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2% அதிகரித்துள்ளன.
அதே நேரத்தில், ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பணவீக்கம் 0.2% இல் நிலையானதாக இருந்தது.
இந்த ஆண்டு, பணவீக்கம் 0.2% ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம், சுவிஸ் தேசிய வங்கி மற்றும் சூரிச்சில் உள்ள சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஓவ் டெக்னொலஜியில் உள்ள பொருளாதார ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில், பெயரளவு ஊதியங்கள் ஆண்டுக்கு ஆண்டு சராசரியாக 1.8% அதிகரித்தன.
மேலும், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சரிவுக்குப் பிறகு, உண்மையான ஊதியங்கள், அதாவது பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்டவை, ஆண்டுக்கு ஆண்டு 0.7% அதிகரித்தன.
மூலம்- swissinfo

