பொலிஸ் வன்முறைக்கு எதிராக லௌசானில் நேற்று நூற்றுக்கணக்கானோர் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தின் இனவெறி எதிர்ப்பு கூட்டணியால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுமார் 500 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிற்பகல் 2 மணிக்கு பிளேஸ் டு சாட்டோவில் கூடினர். அவர்களின் பேரணி பொலிஸ் வன்முறையுடன் தொடர்புடைய இடங்களைக் கடந்து சென்றது.
மே மாத இறுதியில் கைது செய்யப்பட்ட பின்னர் ஒரு நைஜீரிய நபர் இறந்த காவல் நிலையத்திற்கு முன்னால் அது நின்றது.
பேரணியின் இலக்கு பிரேலாஸ் சுற்றுப்புறமாகும். அங்கு ஓகஸ்ட் மாதம் பொலிசாரிடமிருந்து தப்பிச் செல்லும்போது 17 வயது ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர் விபத்தில் கொல்லப்பட்டார்.
ஆர்ப்பாட்டம் அமைதியாக இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
இருப்பினும், பாதை “லெ வௌடோயிஸ்” உணவகத்தைக் கடந்து சென்றபோது சிறிது நேரம் பதட்டமாக இருந்தது. ஓகஸ்ட் மாதம் அங்கு நடந்த ஒரு மோதலில் எரித்திரியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
வௌட் மாகாணத்தில் உள்ள பொலிசார் பல ஆண்டுகளாக பொலிஸ் வன்முறை சம்பவங்களுக்காக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளில், மாகாணத்தில் குறைந்தது ஏழு பேர் பொலிஸ் நடவடிக்கைகளில் இறந்துள்ளனர். இது பல பேரணிகளைத் தூண்டியுள்ளது.
மூலம்- swissinfo

