டிசினோவில் உள்ள ப்ளெனியோ பள்ளத்தாக்கில் இன்று அதிகாலை 16 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கார் விபத்தில் சிக்கினர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டோரே அருகே அதிகாலை 1:30 மணிக்குப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்தது. 16 வயதுடைய இரண்டு சுவிஸ் நாட்டவர்கள், அக்வாரோசா நோக்கி கன்டோனல் வீதியில் ஒரு காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தனர்.
ஓட்டுநர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததன் விளைவாக, கார் வீதியை விட்டு விலகி ஒரு வயலில் விழுந்த பின் தீப்பிடித்தது.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரண்டு இளைஞர்களில் ஒருவர் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப மருத்துவ பரிசோதனையில் மற்ற இளைஞனுக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மூலம்- bluewin

