சைடர்ஸில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், வாலைஸின் சைடர்ஸில் உள்ள ரூ மேக்ஸ்-ஹூபரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, 76 வயதான பெண் குடியிருப்பாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்துள்ளார் என வாலைஸ் கன்டோனல் பொலிசார் அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டிடத்தில் மீதமுள்ள குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்பட்டனர். நான்கு பேர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீ விபத்துக்கான சரியான காரணம் தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்- bluewin

