பெர்னினா ஹாஸ்பிஸிலிருந்து பொன்ட்ரெசினா நோக்கி காரில் சென்று கொண்டிருந்த 22 வயது இத்தாலிய நபர் ஒருவர் மான்டெபெல்லோ ரயில்வே கடவையில் ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
ரயில்வே கடவையில் தடை தாழ்ந்தபோது, பனி மூடிய வீதி மற்றும் கோடை டயர்கள் காரணமாக, கார் தடையின் கீழ் நழுவி ரயில் தண்டவாளத்தில் நின்றது.
அப்போது, பொன்ட்ரெசினா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் காரின் மீது மோதியது. எனினும், வாகனத்தில் இருந்த இரண்டு பேரும் தாங்களாகவே காயமின்றி காரை விட்டு வெளியேறினர்.
மூலம்- bluewin

