3 C
New York
Monday, December 29, 2025

இரவு ரயிலுக்கான மானியத்தை ரத்துச் செய்த நாடாளுமன்றம்.

2026 வசந்த காலத்தில் திட்டமிடப்பட்ட மால்மோவிற்கான இரவு நேர ரயில் இணைப்பிற்கு சுவிஸ் அரசாங்கம் மானியம் வழங்குவதை சுவிஸ் பிரதிநிதிகள் சபை ரத்துச் செய்துள்ளது.

அத்துடன், பட்ஜெட்டில் இந்த ரயிலுக்கு ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் பிராங்கையும் பிரதிநிதிகள் சபை ரத்து செய்துள்ளது.

சுவிஸ் பெடரல் ரயில்வே (SBB) 2026 ஏப்ரலில் பாசலில் இருந்து மால்மோவிற்கு இரவு நேர ரயில்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

ரயில்கள் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படுவதற்கு கூட்டாட்சி அரசாங்கத்தின் நிதி ஒரு முன்நிபந்தனையாகும். இரவு நேர ரயில்கள் பிரபலமாக இருந்தாலும், அதிக செலவுகள் காரணமாக அவை லாபகரமானவை அல்ல.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையினர் இதற்கான மானியத்தை விரும்பவில்லை, அவர்கள் நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 99 வாக்குகளுடன் வெற்றி பெற்றனர்.

மானியம் ஒரு டிக்கெட்டுக்கு 100 முதல் 200 பிராங் வரை இருக்கும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles