பொருளாதார அமைச்சர் கை பார்மெலின், இரண்டாவது முறையாக சுவிஸ் கூட்டமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளாார்.
பார்மெலின் தனது 2021ஆம் ஆண்டு தெரிவு முடிவை முறியடித்து, சாதனை படைத்துள்ளார்.
மொத்தம் 228 வாக்குகளில் 203 வாக்குகள் பார்மெலினுக்கு ஆதரவாக கிடைத்துள்ளன. ஐந்து வாக்குகள் செல்லாதவை மற்றும் 13 வாக்குகள் புள்ளடியிடப்படவில்லை.
பார்மெலினைத் தவிர வேறு ஒருவருக்கு ஆதரவாக ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
2021 இல் முதல்முறை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட போது, 66 வயதான சுவிஸ் மக்கள் கட்சி அரசியல்வாதியான பார்மெலினுக்கு, 188 வாக்குகள் கிடைத்திருந்தன.
ஒரு வருடம் முன்னர் அவர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 196 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஒரு சம்பிரதாயமாகக் கருதப்பட்டாலும், அரசாங்க உறுப்பினர்களின் தங்கள் மறுப்பை அல்லது ஒப்புதலை வெளிப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மில்லேனியத்தில், ஜனாதிபதிகள் நாடாளுமன்றத்தில் சராசரியாக 172 வாக்குகளைப் பெற்றுள்ளனர். அதனை முறியடித்து பார்மெலின் சாதனை படைத்துள்ளார்.
மூலம்- swissinfo

