பெர்ன் டிப்போவில் நேற்றுக்காலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக டிராம் சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டன
பெர்ன்மொபிலால் இயக்கப்படும் பெர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகள் குறைவாகவே இடம்பெற்றன.
6, 7, 8, 9, 10, 12 மற்றும் 20 ஆகிய வழித்தடங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
Bollingerstrasse இல் உள்ள டிப்போவில் ஏற்பட்ட தீ விபத்தே இந்த நிலைக்கு காரணம். தீவிபத்தின் விளைவாக, சில டிராம்கள் டிப்போவை விட்டு வெளியேற முடியவில்லை.
காலை 8 மணி வரை இந்த இடையூறுகள் நீடிக்கும் என்றும், தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது
மூலம்- bluewin

