வௌட் மாகாணத்தில் உள்ள A9 நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய 36 வயதுடைய ஓட்டுநரான துனிசிய நபர், சம்பவ இடத்திலேயே மரணமானார்.
பல்லேகஸ் மற்றும் லு க்ரூக்ஸ் இடையேயான வீதியில் சென்ற வாகனங்களில் ஒன்று, வலதுபுறம் இருந்த பாதையை விட்டு விலகி, தடுப்புச் சுவரில் மோதியதாக வௌட் மாகாண பொலிஸ் அறிவித்ததுள்ளது.
இந்த மோதலின் காரணமாக கார் பின்னோக்கித் தள்ளப்பட்டு, வலதுபுறப் பாதையில் சரியாகச் சென்று கொண்டிருந்த- எதிரே வந்த வாகனத்தின் மீது மோதியது.
வீதியை விட்டு விலகிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநரே உயிரிழந்துள்ளார். 51 வயதான சுவிஸ் நபரான மற்றொரு ஓட்டுநர், காயமின்றி தப்பினார்.
மூலம்- bluewin

