அமெரிக்காவுடனான திட்டமிடப்பட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு சுவிஸ் நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.
பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழுவைத் தொடர்ந்து, செனட்டின் வெளியுறவுக் குழுவும் நேற்று பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை அங்கீகரித்தது.
ஆழமான விவாதத்திற்குப் பின்னர் நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 10க்கு 0 என்ற அடிப்படையில் செனட் குழு ஆணையை அங்கீகரித்தது, இரண்டு பேர் வாக்களிக்கவில்லை என்று குழுவின் தலைவர் கார்லோ சோமருகா பெர்னில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
வரைவு ஆணையைப் பற்றி ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
அவற்றுக்கு பொருளாதார அமைச்சர் கை பர்மெலின் மற்றும் அரச செயலாளர் ஹெலீன் பட்லிகர் ஆர்டிடா ஆகியோர் திருப்திகரமாக பதிலளித்தனர்.
மூலம்- swissinfo

