டிசினோ மாகாணத்தில் உள்ள புருசாட்டாவில் உள்ள சுங்கச் சாவடியில், 100 கிலோவிற்கும் அதிகமான அறிவிக்கப்படாத உணவுப் பொருட்களுடன் இத்தாலியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
51 வயதான அவர் 66 பனெட்டோன்களை சுவிட்சர்லாந்திற்குள் கொண்டு வர முயன்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புருசாட்டாவில் உள்ள நிரந்தரமற்ற எல்லைக் கடவை வழியாக ஒரு வானில் சுவிட்சர்லாந்திற்குள் நுழைந்த அவர், சிறிது நேரத்திலேயே ஒரு நடமாடும் ரோந்துப் பிரிவால் கைது செய்யப்பட்டதாக சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இத்தாலியர் 164 லிட்டர் எண்ணெய், 81 கிலோ எடையுள்ள 66 பனெட்டோன்கள், 5 கிலோ இறைச்சி, 28 கிலோ மொஸெரெல்லா மற்றும் சுமார் பத்து போகாசியா பாண் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருந்தார்.
இதையடுத்து, அந்த நபருக்கு பல நூறு பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் அவரது பொருட்களை சுங்கம் மூலம் அகற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்டோனல் ஆய்வகம் பொருட்கள் எந்த நிலைமைகளின் கீழ் கொண்டு செல்லப்பட்டு சேமிக்கப்பட்டன என்பதையும் விசாரிக்கும்.
மூலம்- swissinfo

