லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள 98வது அகாடமி விருது விழாவில், சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பட்டியலில் சுவிஸ் திரைப்படமான, பெட்ரா வோல்பின் ஹெல்டின் (லேட் ஷிப்ட்) மற்றும் 14 படங்கள் இடம்பெற்றுள்ளன.
சர்வதேச திரைப்படப் பிரிவில் 2026 போட்டிக்கு மொத்தம் 86 நாடுகள் விண்ணப்பித்திருந்ததாக, லொஸ் ஏஞ்சல்ஸில் திரைப்பட அகாடமி அறிவித்தது.
ஒரு டசின் திரைப்பட விழாக்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏற்கனவே குறைந்தது ஆறு விருதுகளை வென்றுள்ள பெட்ரா வோல்பின் லேட் ஷிப்ட், இந்த ஆண்டு அதிக மக்களை திரையரங்குகளுக்கு ஈர்த்த சுவிஸ் திரைப்படமாகும்.
பெர்லினேலில் உலக அரங்கேற்றத்தைக் காட்டிய இந்தத் திரைப்படம், சுவிஸ் மருத்துவமனையில் உள்ள நர்சிங் ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது.
இந்தப் பிரிவில் 15 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. நோ அதர் சொய்ஸ் (தென் கொரியா), தி வொய்ஸ் ஒப் ஹிந்த் ரஜப் (துனிசியா) மற்றும் பெலன் (அர்ஜென்டினா) ஆகியவையும் போட்டியில் உள்ளன. ஈரானிய இயக்குனர் ஜாஃபர் பனாஹியின் இட் வோஸ் ஜஸ்ட் எ ஆக்ஸிடென்ட் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப நாடகமான சென்டிமென்டல் வேல்யூ (நோர்வே), ரோட் மூவியான சிராட் (ஸ்பெயின்), தி சீக்ரெட் ஏஜென்ட் (பிரேசில்), சவுண்ட் ஒப் ஃபாலிங் (ஜெர்மனி), ஹோம்பவுண்ட் (இந்தியா), தி பிரசிடென்ட்ஸ் கேக் (ஈராக்), கோகுஹோ (ஜப்பான்), ஆல் தட்ஸ் லெஃப்ட் ஒப் யூ (ஜோர்டான்), பாலஸ்தீனம் 36 (பாலஸ்தீனம்), மற்றும் லெஃப்ட்-ஹேண்டட் கேர்ள் (தைவான்) ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ளன.
பரிந்துரைக்கப்பட்ட 15 படங்களில், ஐந்து படங்கள் ஜனவரி 22 அன்று இறுதிப் போட்டிக்கு பரிந்துரைக்கப்படும். 98வது அகாடமி விருது வழங்கும் விழா மார்ச் 15, 2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
மூலம்- swissinfo

