சுவிட்சர்லாந்தின் கொன்ஸ்டன்ஸ் ஏரியில் சுமார் 800 கிலோ எடையுள்ள துருப்பிடிக்காத ஜின் நிரப்பப்பட்ட, பந்து வடிவிலான எஃகு கொள்கலனை சுழியோடி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
சிறப்பு சுவையை உருவாக்க, ஜின் உற்பத்தி நிறுவனம் ஒன்று, 2022 ஆம் ஆண்டில் ஏரியில் 100 நாட்களுக்கு எஃகு பந்தில், ஜின்னை சேமித்து வைத்தது.
பின்னர் அந்த எஃகு பந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அது திருடப்பட்டதாக முறைப்பாடு செய்தது.
இந்த நிலையில், ரோமன்ஷோர்ன் கடற்கரையில் சுமார் 15 மீட்டர் ஆழத்தில் டைவிங் ரோபோவின் உதவியுடன் இந்த எஃகு கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டதாக ரோமன்ஷோர்ன் கப்பல் மீட்பு சங்கத்தின் தலைவர் சில்வன் பகானினி தெரிவித்தார்.
“2022 ஆம் ஆண்டு திருடப்பட்டதாகக் கூறப்பட் இந்த எஃகு பந்தை, வெள்ளிக்கிழமை நண்பகலில் காவல்துறையினர் கண்டுபிடித்து கொன்ஸ்டன்ஸ் ஏரியிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது என்று துர்காவ் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கோளவடிவ கொள்கலன், 230 லிட்டர் கொள்ளளவு கொண்டது. 2022 ஆம் ஆண்டு போத்தல்கள் ஒவ்வொன்றும் 99 ரூபாவுக்கு விற்கப்பட இருந்தன.
மீட்கப்பட்ட ஜின் கொள்கலன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo

